Ticker

6/recent/ticker-posts

இலங்கைக்கு அலிபாபா உதவி!

உலகின் மிகப்பெரிய ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அலி பாபா அறக்கட்டளையின் நிறுவனர் ஜெக் மா  Jack Ma, கோவிட் -19 வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவியளிக்க முன்வந்தள்ளார். இதனடிப்படையில் இலங்கை உட்பட ஆசியாவின் 10 நாடுகளுக்கு மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

அலி பாபா அறக்கட்டளை மூலம் இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா, லாவோஸ், மாலத்தீவு, மங்கோலியா, மியான்மர், நேபாளம் மற்றும் பாகிஸ்தானுக்கு நன்கொடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நன்கொடையில் 18 மில்லியன் முகமூடிகள், 2,10,000 கோவிட் -19 சோதனை கருவிகள், 36,000 பாதுகாப்பு ஆடைகள் மற்றும் உடல் உஷ்ணத்தை அளவிடும் தெர்மோமீட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் உள்ளடங்க விருப்பதாக அறிய வருகிறது.

அலி பாபா அறக்கட்டளை கடந்த வாரம் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸுக்கு மருத்துவ பொருட்களை உதவியாக வழங்கியது.

Post a Comment

0 Comments