Ticker

6/recent/ticker-posts

ரத்தன தேரர், தயாரத்ன தேரர் மற்றும் ஞானசரா தேரர் ஆகியோரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன!

அபே ஜனபல கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல்  வேட்புமனுக்கள்  தொழில்நுட்ப காரணங்களை வைத்து நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கொழும்பு, மொனராகலை மற்றும் குருநாகலை போன்ற மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் கட்சியின் முக்கியஸ்தராக கருதப்படும்  அதுரலியே ரத்தன தேரரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு கலகொடஅத்தே ஞானசார தேரர், அக்மீமன தயாரத்ன தேரர், மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர், ஆனந்த சாகர தேரர்,  காமினி திலக்கசிரி, பிரசன்ன சோலங்காரச்சி உட்பட பலரின் பெயர்கள் நிராகரிக்கப்பட்ட இந்த மனுவில் இருப்பதாக அறிய வருகிறது.

இவர்கள் அனைவரும் இந்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துவிட்டனர்.

இதற்கிடையில், நேற்று அபே ஜனபல கட்சிaின் வேட்பு மனுக்களில் கையெழுத்திட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments