Ticker

6/recent/ticker-posts

வன்னியில் போட்டியிடும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழர் சமூக ஜனநாயக கட்சி வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வேட்பு மனுவினை தாக்கல் செய்தது.

இதன்போது தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளரான சிறிரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இக்கட்சியில் வீ.சிவமூர்த்தி, ச.ஜேசுதாசன், சி.திருஞானம், த.சசிரோகன், சு.சுமன், ஈ.ஆபிரகாம்லிங்கன், க.சந்திரமோகன், கி.அன்ரன்பாஷ்கரராஜ் ஆகியோர் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments