Ticker

6/recent/ticker-posts

எச்சரிக்கை! கொரோனா வைரஸ் பிளாஸ்டிக் மற்றும் உலோகங்களின் மேற்பரப்புகளில் மிக நீண்ட நேரமாக தங்கி நிற்கும்!

கொரோனா கோவிட் -19 வைரஸ் பிளாஸ்டிக் மற்றும் உலோகங்களின்  மேற்பரப்புகளில் மிக நீண்ட நேரமாக  தங்கி நிற்கும் தன்மை கொண்டது என்று இங்கிலாந்தில் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஒப்ஃ மெடிசின்  New England Journal of Medicine  சஞ்சிகை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் இந்த பிளாஸ்டிக் மற்றும் உலோக பரப்புகளில் 72 மணித்தியாலங்கள்   உயிரோட்டமான நிலையில்  தங்கி நிற்கும் என்று அந்த சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே பொது இடங்களிலுள்ள பிளாஸ்டிக் உலோகம் போன்றவற்றை தொடுவதிலிருந்து கட்டாயம் தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.

SARS வைரஸும், கோவிட் -19 வைரஸும் காற்றில் பரவும் வேகம் சமமானதாக  இருப்பதாக அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது. எனவே கோவிட் 19 க்கான சிகிச்சை SARS வைரஸ் தொற்றுக்கான  சிகிச்சையுடன் மிகவும் ஒத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments