உலகில் கோரத்தாண்டவமாடும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலகின் இரு அதிகார சக்திகளான சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன.
உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான "பழியை மாற்ற" அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சிப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா வைரஸை தனது நாட்டுக்குள் கொண்டு வந்து பரப்பியது அமெரிக்க இராணுவமே என்று சீனா குற்றம் சாட்டியிருந்தது.
கடந்த ஆண்டு பிற்பகுதியில் சீனாவின் மத்திய நகரமான வுஹானில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த போது சீனா வெளிப்படைத்தன்மையோடு செயற்படாததால் உலகம் "ஒரு பெரிய விலையை செலுத்துகிறது" என்று டிரம்ப் கடந்த வியாழக்கிழமை குற்றம் சாட்டினார்.
தொற்றுநோய் பரவலின் ஆரம்ப கட்டங்களில் தகவல்களை மறைப்பதற்கும், தகவல் வெளியிட்டவர்களைகளைத் தண்டிப்பதற்கும் சீனா முயற்சித்ததாக அமெரிக்காவினால் சீனா மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
0 Comments