Ticker

6/recent/ticker-posts

ஒரு பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கு 5.1 கோடி ரூபாய் பொதுமக்களின் பணம் செலவு!


எதிர்வரும் 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கு 1000 கோடிகள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தேர்தல் வரலாற்றில் அதிகம் பின்போடப்பட்டு இக்கட்டான நிலையில் இடம்பெறும் ஒரு தோ்தலை இன்று எங்கள் நாடு முன்னோக்கியிருக்கிறது.
இன்றைய மவ்பிம ஆசிரியர் தலையங்கம் இது பற்றி பேசியிருக்கிறது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 அங்கத்தவர்களில் 196 அங்கத்தவா்கள் நாட்டு மக்களின் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்படுகின்றார்கள். இந்த 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். ஏனைய 29 பேரும் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்கிறார்கள்.
இதன்படி, தொிவு செய்யப்படும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்காகவும் பொதுமக்களின் பணத்திலிருந்து தலா 5.1 கோடி ரூபாய்கள் செலவிடப்படவிருக்கின்றன.
“இது அரசாங்கப் பணம் தானே எங்களுக்கென்ன?” என்று சிலர் இத்தகைய தகவல்களைப் பார்த்து விட்டு கரிசனைக் காட்டாமல் போய்க் கொண்டே இருப்பார்கள்.
பொதுமக்களிடமிருந்து வரியாக அறவிடப்படுகின்ற
பொதுப்பணமே இந்த வகையில் செலவிடப்பட இருக்கினறன என்பதை நாம் மறந்து போய் விடுகிறோம்.
எமது அடிப்படை நுகர்வுப் பொருட்களான பாண், மா, பால்மா, அரிசி, பருப்பு போன்ற பொருட்களின் மூலம் பெறப்படுகின்ற வரிகள் உட்பட்டவை தான் அரசாங்க பணமாக பாராளுமன்ற அங்கத்தவர்களை தொிவு செய்வதற்கும், தொிவாகிய பின்னர் இவர்களை நடாத்துவதற்கும், பராமரிப்பதற்கும் செலவிடப்படுகின்றன.
ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் ஏழை கூட அரசாங்கத்திற்கு வரி செலுத்திக் கொண்டு இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தனது வாக்குப் பலத்தின் மூலமும், வரிப்பணத்தின் மூலமும் தெரிவு செய்து, அவர்களை பராமரித்துக் கொண்டிருக்கின்றான் என்பது நெஞ்சை நெருட வைக்கும் உண்மையாகும்

Post a Comment

0 Comments