Ticker

6/recent/ticker-posts

கண்டி தேர்தல் பிரசாரத்தில் அலி சப்ரி


(ஐ.ஏ. காதிர் கான்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளன தேசியத் தலைவர்ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிகண்டி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் நடைபெறும் பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

இக்கூட்ட நிகழ்வுகள், (18 ) சனிக்கிழமை, (19) ஞாயிற்றுக்கிழமைகளில்  காலை 9.30 முதல் இரவு 9.30 வரைகண்டி மாவட்டத்தில் உள்ள நாவலப்பிட்டியகம்பளைஉடுநுவரயட்டிநுவரஹேவாஹெட்டகண்டிபாத்ததும்பரஹாரிஸ்பத்துவகலகெதர ஆகிய தொகுதிகளிலுள்ள பல பிரதேசங்களில் நடைபெறும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் கண்டி மாவட்டத்தில்  போட்டியிடும் ஏ.எல்.எம். பாரிஸின் அழைப்பின் பேரில், ஜனாதிபதியின் விஷேட பிரதி நிதியாக கண்டி மாவட்டத்திற்கு வருகை தரும் இவர் பங்கு பற்றும் இந்நிகழ்வுகளில்ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளன அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம். உவைஸ் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்

Post a Comment

0 Comments