Ticker

6/recent/ticker-posts

மின்சார கட்டணத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ


மின்சார கட்டணத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டணத்தின் ஒரு பகுதியை ஏற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று  பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இன்று (16) யட்டியாந்தோட்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான கட்டணம் பெப்ரவரி மாதத்திற்கான கட்டணத்தை  விட  அதிகமாக இருந்தால்  பெப்ரவரி மாதத்திற்கான கட்டணத்தையே   செலுத்த பாவனையாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு ஏற்கனவே தங்கள் கட்டணங்களை செலுத்திய வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலுத்தியிருந்தால் அவை அடுத்த கட்டணங்களுக்கு வரவு வைக்கப்படும்.

கடந்த மூன்று மாத காலமாக, சரியான நிதி ஒதுக்கீடு  இல்லாமல், அமைச்சரவை ஒன்றின் மூலம்  கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நிறைய காரியம் ஆ்ற்றியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் அரசாங்கம் செயல்படவில்லை என்று சில அரசியல் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள் என்று பிரதமர் கூறினார்.

Post a Comment

0 Comments