Ticker

6/recent/ticker-posts

பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ந்தும் பணி பகிஷ்கரிப்பில்..!


இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் இடம்பெற்ற இரண்டாவது நாள் கலந்துரையாடலும் தோல்வியடைந்ததால் தனது வேலைநிறுத்தத்தை தொடரப்போவதாக  அறிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்று சுகாதார அமைச்சர் 16 ஆம் திகதி  ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை  கருத்து காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள்  இதுவரை மேற்கொண்ட கடமைகளை தொடர்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன கூறியுள்ளார்.

சுற்றுநிருபம்  திருத்தப்பட்டு பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தொற்று நோய் பிரிப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், பொது சுகாதார ஆய்வாளர்கள் 'சுகாதார உதவியாளர்கள்' என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.  முறையான நடைமுறைகள் மற்றும் அதிகாரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம்  பொது சுகாதார ஆய்வாளர்கள் தடையின்றி தங்கள் கடமைகளைச் செய்ய அனுமதிக்குமாறு  பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திற்கு கோரிக்கை  விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments