முச்சக்கரவண்டி ஒன்று பாதையை விட்டு விலகி, வாய்கால் ஒன்றில் கவிழ்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் ஒன்றரை வயது மற்றும் 9 வயது பிள்ளைகள் இருவரும் அவர்களுடைய தாயும் உயிரிழந்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த தாயே முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றுள்ளதாகவும் அவருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது.
உயிரிழந்த தாயினதும் பிள்ளைகள் இருவரினதும் சடலங்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

0 Comments