Ticker

6/recent/ticker-posts

எதிர்வரும் 30ஆம் திகதி காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம்!

 


எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டமொன்று முன்னெடுனக்கப்படவுள்ளது.

இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி திருமதி அமலநாயகி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த பேரணி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எம்மால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பேரணியில் அனைவரும் கலந்துகொண்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக தற்போதைய அரசு எவ்விதமான கரிசனையும் கொள்ளாது என்பது அனைவரும் அறிந்த விடயம்.

அதனால் எமக்கான தீர்வினை சர்வதேசம் தலையீடு செய்து பெற்றுத் தருவதனை வலியுறுத்தும் முகமாக இப்பேரணியில் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வருமாறு அனைவரையும் தயவுடன் அழைக்கின்றோம்” என்று அவர் தெரிவித்துள்ளார். (Athavan News)

Post a Comment

0 Comments