சிறிய குற்றங்கள் தொடர்பில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகள் 444 பேரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் 444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறசை்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல் தெனிய தெரிவித்துள்ளார்.
29 சிறைச்சாலைகளை சேர்ந்த் 18 பெண்கள் உட்பட 444 கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அவர்களுள் 83 பேர் வெலிகட சிறைச்சாலையில் சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட சிறிய குற்றங்களுக்காக சிறையில் உள்ளவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற தவறுகளுடன் தொடர்புடைய எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments