Ticker

6/recent/ticker-posts

“பேக் ஐடி” காரா்களுக்கும், அவதூறு பரப்புகிறவா்களுக்கும் வருகிறது “ஆப்பு”!

 


ஃபேஸ்புக் உட்பட பல சமூக ஊடக வலையமைப்பு நிறுவனங்கள், போலி கணக்குகள் (பேஃக் ஐடி) மற்றும்  தவறான, பொய்யான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவோருக்கு  எதிராக  நடவடிக்கைகள்  எடுக்க ஒப்புக்கொண்டுள்ளன.

சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சா்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மெட்டா, கூகுள், ட்விட்டர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

அதன்படி, போலி கணக்குகள் (பேஃக் ஐடி)மற்றும்  தவறான, பொய்யான, அவதூறான  தகவல்களை பரப்புவோருக்கு எதிராக அபராதம் விதிக்கும் முறை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா மிரா் சிங்கள இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான தகவல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments