Ticker

6/recent/ticker-posts

குழந்தையை ஆற்றில் வீசிய தாய் ! வத்தளையில் சம்பவம்!


வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் களனி ஆற்றில் தனது குழந்தையை வீசி தற்கொலைக்கு முயன்ற பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காணாமல் போன 5 வயது குழந்தையை தேடும் நடவடிக்கையை கடற்படையினரின் உதவியுடன் பிரதேசவாசிகள் மேற்கொண்ட போதிலும் குழந்தை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

42 வயதான தாயார் வத்தளை ஹெந்தல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

கைது செய்யப்பட்ட பெண் இன்று வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment

0 Comments