சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் (Sichuan) திங்களன்று ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டும், 16 பேர் காணாமல் போயுமுள்ளனர், மாகாண தலைநகரான செங்டுவில் (Chengdu) நிலச்சரிவுகள் காரணமாக கட்டிடங்கள் அதிா்ந்துள்ளன. சிச்சுவான் மாகாணம் ஏற்கனவே COVID-19 காரணமாக பூட்டப்பட்ட நிலையில் உள்ளது.
திபெத்திய பீடபூமியின் விளிம்பில் அமர்ந்திருக்கும் சிச்சுவான் மாகாணம், தொடர்ந்தும் நிலநடுக்கங்களால் தாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
திபெத்திய தன்னாட்சி மாகாணமான கார்ஸில் உள்ள வரலாற்று நகரமான மோக்ஸியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, அங்கு 29 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பாதுகாப்பற்ற இடங்களில் இருந்து 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக சின்ஹுவா Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2008ல் சிச்சுவானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 90,000 பேர் பலியாகியனா். 7.9 ரிக்டர் அளவிலான அந்த நிலநடுக்கம் சீனாவின் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் ஆகும்.

0 Comments