பொம்மையொன்றை துணியால் போர்த்தி, ஒரு குழந்தை போல் காட்டிக்கொண்டு கோட்டை புகையிரத நிலையத்தில் பிச்சையெடுத்த பெண்ணொருவா் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளாா்.
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தினுள் பொம்மையொன்றை துணியினால் போா்த்தி வைத்துக் கொண்டு பயணிகளிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்த பெண்ணொருவர் பிடிபட்டதாக புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
குழந்தைக்கு பால் மா வாங்கிக் கொடுக்க வசதியில்லை என்று சொல்லியே இந்தப் பெண் யாசகம் கேட்டுள்ளாா்.
குழந்தை முழுவதுமாக துணியால் சுற்றப்பட்டிருந்ததால் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுமே என்று தோன்றியதால், அதைப் பார்த்த புகையிரத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இதுகுறித்து அந்த பெண்ணை விசாாித்துள்ளார்.
அப்போதுதான் துணியால் சுற்றப்பட்டிருப்பது உண்மையான குழந்தையல்ல பொம்மையென்று அவருக்கு தொிய வந்துள்ளது.
பயணிகளின் அனுதாபத்தை பெறவே இவ்வாறு செய்ததாக கூறிய அந்த பெண்ணை புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனா்.

0 Comments