Ticker

6/recent/ticker-posts

அக்கரபத்தனை போபத்தலாவ கால்நடை பண்ணை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்!


(ஜி.கே. கிரிஷாந்தன்)

அக்கரபத்தனை போபத்தலாவ கால்நடை பண்ணையை தனியாரிடம் ஒப்படைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறி பண்ணையின் ஊழியர்கள்  இன்று (10) பண்ணைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது பண்ணை தொடர்ந்து லாபம் ஈட்டும் நிறுவனம் என்றும், அந்த பண்ணையை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்திருப்பது ஊழியர்களுக்கு  அநீதி இழைக்கும் செயல் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்  கூறுகின்றனர்.

மூன்று தலைமுறைகளுக்கு மேலாக அரசால் நடத்தப்பட்டு லாபம் ஈட்டி வரும் இப் பண்ணை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் தங்களது வேலைகள் மிகவும் பாதுகாப்பற்ற நிலைக்கு மாறியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பண்ணையில் தற்போது சுமார் 100 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும், தனியாருக்கு மாற்றப்பட்ட பின்னர், தங்கள் வேலையை மட்டுமின்றி, தற்போது வசிக்கும் பண்ணைக்குச் சொந்தமான வீடுகளைக்கூட விட்டுச் செல்ல வேண்டியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.


Post a Comment

0 Comments