கம்பஹா பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா, அகரவிட பிரதேசத்தில் பெண்ணொருவரின் கைப்பையை கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது, குறித்த பெண்ணின் அலறலை அடுத்து அந்த இடத்திற்கு வந்த தந்தை, மகன் இருவரையும் சந்தேக நபர் தாக்கியுள்ளார்.
குறித்த மகன் கத்திக்குத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன் அவரது தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்று சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய சென்ற பொலிஸார், அங்கு சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை தடியால் தாக்கியுள்ளார்.
அப்போது, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கம்பஹா, பஹலகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

0 Comments