Ticker

6/recent/ticker-posts

“பொப்பியுலர் பிரண்ட் ஒஃப் இந்தியா” அமைப்புக்கு இந்திய அரசு தடை!


இந்தியாவில் இயங்கி வந்த “பொப்பியுலர் பிரண்ட் ஒஃப் இந்தியா” (பிஎப்ஐ) என்ற அமைப்பை ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய மத்திய அரசு தடை செய்துள்ளது. 

நேற்று (செப்.28) பொப்பியுலர் ஃப்ரண்ட் ஒஃப் இந்தியா அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் சட்டவிரோதமானவை என இந்திய மத்திய அரசு அறிவித்து இந்த அமைப்புக்கு தடை விதித்துள்ளது.

ரெகப் இந்தியா பவுண்டேஷன் (RIF), கெம்பஸ் ஃப்ரண்ட் ஒஃப் இந்தியா (CFI), அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் (AIIC), தேசிய மனித உரிமைகள் அமைப்பு (NCHRO), நெஷனல் வுமன்ஸ் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன் மற்றும் ரிஹாப் பவுண்டேஷன் கேரளா போன்ற  இதன் துணை அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன. 

இதனையடுத்து, பொப்பியுலர் பிரண்ட் ஒப் இந்தியா என்ற அமைப்பு கலைக்கப்படுவதாக அதன் கேரள மாநில பொதுச்செயலாளர் அல்துல் சத்தார் அறிவித்துள்ளார்.

நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில் மத்திய அரசின் தடையை ஏற்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முஸ்லிம் மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட  பொப்பியுலர்   ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்தியாவில் முன்வைக்கப்பட்டு வந்தன. 

பல்வேறு இடங்களில் மதக் கலவரத்தைத் தூண்டுவதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.

இந்த சோதனைகளில் முடிவில் தமிழகம், உத்தர பிரதேசம், கா்நாடகம், குஜராத், டெல்லி, மராட்டியம், அசாம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 350க்கும் அதிகமான பிஎப்ஐ அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தநிலையில், மாநில அரசின் தடையை தொடர்ந்து பொப்பியுலர் ஆப் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில், மத்திய அரசின் இந்த முடிவை ஏற்பதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Post a Comment

0 Comments