ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழில் செய்த ஒருவாின் பெயாில் வைப்பிலிடப்பட்ட இரண்டு கோடிக்கும் அதிகமான டொலா்கள் குறித்து விசாரணை ஒன்றை சீஐடியினா் ஆரம்பித்துள்ளனா்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள நிறுவனமொன்றில் கணக்காளராக தொழில் புாிந்த ஒருவரால், இரண்டு கோடி இருபத்து இரண்டு இலட்சத்து ஐம்பத்து மூவாயிரம் அமொிக்க டொலா்கள் இலங்கையிலுள்ள வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மேற்படி நிறுவனத்தின் உாிமையாளரால் புகாரளிக்கப்பட்டுள்ளது.
வேலுப்பிள்ளை பொன்னம்பலம் பரமலிங்கம் மற்றும் அவரது மனைவி சிவசக்தி பரமலிங்கம் ஆகியோர் மீது ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள T Choithran and sons LLC நிறுவனத்தின் உரிமையாளர் லக்ராஜ் தாகூர்தாஸ் பகரானி மெய்ரா என்பவரால் மேற்படி புகார் வழங்கப்பட்டுள்ளதாக சீஐடியினா் நீதிமன்றுக்கு அறிவித்தனா்.
இதன்படி, வேலுப்பிள்ளை பொன்னம்பலம் பரமலிங்கம் மற்றும் அவரது மனைவி சிவசக்தி பரமலிங்கம் ஆகியோரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குமாறு இலங்கையிலுள்ள மூன்று வங்கிகளுக்கு கொழும்பு மேலதிக நீதவான் திரு.ஹர்ஷன கெகுலாவல நேற்று(22) உத்தரவு பிறப்பித்துள்ளாா் என ஸ்ரீலங்கா மிரா் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ගෝඨාට වෙච්ච දේ තමයි රනිල්ටත් වෙන්නේ | கோத்தாவுக்கு நடந்ததுதான் ரணிலுக்கும் நடக்கும் | Mujibur Rahman
ஒரு நிமிட வீடியோ : https://www.youtube.com/shorts/PdeZ7560LOM

0 Comments