Ticker

6/recent/ticker-posts

உய்குா் முஸ்லிம்கள் மீது சீனா இழைக்கும் கொடுமைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகும் - ஐ.நா அறிவிப்பு


சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் வாழும் உய்குா் இன முஸ்லிம்கள் மீது பல தசாப்த காலங்களாக சீனா இழைத்து வரும் கொடுமைகளை மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிக்கையில் சீனா "கடுமையான மனித உரிமை மீறல்களில்" ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உய்குா் முஸ்லிம்கள் மீதான சீனாவின் கொடுமைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி 48 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று சீனா, ஐ.நா.வை வலியுறுத்தி வந்தது. ஐ.நாவின் இந்த அறிக்கைய மேற்கத்திய சக்திகளால் மேடையேற்றப்பட்ட "கேலிக்கூத்து" என்று சீனா வா்ணித்துள்ளது.

ஐநாவின் இந்த அறிக்கை, உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற இன சிறுபான்மையினருக்கு எதிரான சீனாவில் இடம்பெறும் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை மதிப்பிடுகிறது. 

சீனாவின் இந்த கொடுமைகளை ஆராய்ந்த புலனாய்வாளர்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும், சித்திரவதைக்களுக்குமான நம்பகமான ஆதாரங்கள் தமக்குக் கிடைத்ததாகக் கூறியுள்ளனர்.

சீனாவின் வடமேற்கு மாகாணமான சின்ஜியாங் பிரதேசத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து மனித உரிமைக் குழுக்கள் பல ஆண்டுகளாக கவனமெடுத்து வந்தன. 

ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக "மறு கல்வி முகாம்கள்" என்று அழைக்கப்படும் ஒரு பெரிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உய்குா் இன பெண்கள் மீது கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் கட்டாய கருத்தடை போன்ற குற்றங்களையும் சீன பாதுகாப்புத் தரப்பினா்  இழைத்து வருகின்றனா்.

சீனா எப்போதும் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கடுமையாக இந்தக் குற்றங்களை மறைத்தும்,  மறுத்தும் வருகிறது.

உய்குா் முஸ்லிம்களின் அவலமான வாழ்க்கையை தமிழில் விபரிக்கும் வீடியோ இணைப்பு  https://www.youtube.com/watch?v=R-c6nBJ_mC8&t=463s



Post a Comment

0 Comments