Ticker

6/recent/ticker-posts

வரக்காபொல மண் சரிவு - தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டது


நேற்று (14ஆம் திகதி) பெய்த கனமழை காரணமாக வரக்காபொல தும்பலியத்த பிரதேசத்தில் இரண்டு மாடி வீடு ஒன்று மண்சரிவினால் புதையுண்டு முற்றாக சேதமடைந்துள்ளது.

வீட்டிற்குள் இருந்த தாய், தந்தை மற்றும் மகன் மண்ணில் புதையுண்டனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் இடிபாடுகளில் சிக்கிய தந்தை மீட்கப்பட்டு வரக்காபொல வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று (15) அதிகாலை 4.10 மணியளவில் 48 வயதான தாயின் சடலம் வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது காணாமல் போன 24 வயது மகனின் சடலத்தை தேடும் பணியில் இராணுவ வீரர்கள், பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனா். 

Post a Comment

0 Comments