Ticker

6/recent/ticker-posts

ஞானசார தேரருக்கு பிடியாணை!


பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஞானசார தேரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தால் இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்காக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகியிருக்கவில்லை என்ற காரணத்தினால் அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.


Post a Comment

0 Comments