அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி தோட்ட ஊழியர்கள் நேற்று (01) தலவாக்கலை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தோட்ட ஊழியர்கள் தலவாக்கலை நகரின் பிரதான சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒன்று கூடி எதிர்ப்பு பதாதைகளை ஏந்தி ஆா்ப்பாட்டம் செய்தனர்.
தோட்ட ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான கூட்டு ஒப்பந்தம் கடந்த 30ம் திகதியுடன் காலாவதியாகியுள்ளதாகவும், தற்போதைய வாழ்க்கைச் செலவை மையப்படுத்தி 70 சதவீத சம்பள உயர்வை வழங்குமாறு தோட்ட கம்பனிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் 25 சதவீத ஊதிய உயர்வு வழங்கவே தோட்ட கம்பனிகள் விருப்பம் தொிவித்துள்ளதாகவும் தொழிலாளா்கள் தெரிவித்துள்ளனர்.

0 Comments