மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியில் கடந்த மூன்று மாதங்களில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோா் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதாக சவுதி கெஸட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மதீனாவில் உள்ள மஸ்ஜிதுன்னபி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டிருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஸ்ஜிதுன் நபவி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மதீனா ரவ்தா ஷரீபில் 1,149,364 ஆண்களும், 2,273,033 பெண்களும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய வருகிறது.
புள்ளிவிபரங்களின்படி, மஸ்ஜிதுன் நபவியில் பார்வையாளர்களுக்காக வழங்கப்பட்ட இப்தார் உணவு பொதிகளின் எண்ணிக்கை அதே காலப்பகுதியில் 825,000 க்கும் அதிகமாக இருந்ததாகவும் அறிய வருகிறது.
0 Comments