அம்பாறை மஹாஓயா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆசிாியா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். 54 வயதுடைய சந்தேக நபரான ஆசிரியரை தெஹியத்தகண்டிய நீதவான் திருமதி வாசலா அவா்கள் முன்னிலையில் ஆஜா்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மஹாஓயா பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன வீரசிறிக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த சந்தேகநபரான ஆசிரியா் மஹாஓயா பொலிஸாரால் 14ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமிகள் மஹாஓயா பொது வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாஓய பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன வீரசிறி மற்றும் மஹாஓயா பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிாிவின் அதிகாரி திருமதி சி.பி.ஓ. எஸ் சமரகோன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

0 Comments