கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்றிரவு காரை விபத்துக்குள்ளாகி துபாய்க்கு தப்பிச் சென்ற 26 வயதான எம்.பி.என்.ரிசாக் என்ற வர்த்தகர் நேற்று (12) இரவு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவா் துபாயில் இருந்து EK-648 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் நேற்று இரவு 09.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அதன் போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் பணிபுரிந்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் குறித்த நபா் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்திற்கு சென்று இந்த நபரை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.
இந்த நபரின் வாகனத்தால் மோதுண்ட முச்சக்கர வண்டி சாரதி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

0 Comments