அரசாங்க அதிகாரிகள் தான் அரசாங்கங்களை உருவாக்குகிறார்கள் மற்றும் அரசாங்கங்களை மாற்றுகிறார்கள். கொஞ்சம் கூட அரசியல் அனுபவம் இல்லாத கோத்தபாய ராஜபக்ஷ, பெரும் நம்பிக்கைகளோடு ஜனாதிபதி பதவிக்கு வந்தார்.
ஆனால் முதலாவது அமைச்சரவை பதவிப் பிரமாணத்தின்போது, களி மண் கைத்தொழில் அமைச்சர், பத்திக் கைத்தொழில் அமைச்சர் போன்ற அமைச்சுப் பதவிகளை உருவாக்கியது யார்? இந்த முடிவுகளை எடுத்தது யார்?
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இவ்வாறான அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்ட அன்றே அரசாங்கத்தின் பெறுமதி சீா்குலைந்தது. “களி மண்” அமைச்சர், ”பத்திக்” அமைச்சர் என்ற பெயா்களைக் கேட்டதும் மக்கள் சிரித்தனர்.
அரசியல்வாதிகளை இவ்வாறு தமக்கேற்றவாறு வளைத்தெடுத்து, தொலைநோக்குப் பார்வையற்ற முடிவுகளை எடுக்கும் அரசு அதிகாரிகள் குழு இருக்கிறது. இதுபோன்ற முடிவுகளை எடுத்த அதிகாரிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும்.
அரச அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கு முதலில் பாராளுமன்றம் அறிவொளி பெற்ற பாராளுமன்றமாக மாற வேண்டும்.
மேலும், அரசு அதிகாரிகள் குறித்து அரசும், எதிர்க்கட்சியும் புரிந்து கொள்ள வேண்டும். அரசு அதிகாரிகளின் தேவைகளையும், விருப்பங்களையும் அரசு நிறைவேற்றாத போது, அரசு அதிகாரிகள் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்புகின்றனர்.
அரசாங்கத்தால் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியாத போது, அரசாங்க அதிகாரிகள் அரசாங்கத்தை விமர்சித்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொள்கின்றனர்.
இவ்வாறு, அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

0 Comments