173 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட கேகாலை பொது வைத்தியசாலையின் கனிஷ்ட சுகாதார உதவியாளரை நாளை 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் வாசனா நவரத்ன உத்தரவிட்டுள்ளார்.
கேகாலை பரகம்மன நாமல் உயனவில் வசிக்கும் மொரகஹகந்த ராலலாகே குசுமாவதி என்ற 58 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கனிஷ்ட சுகாதார உதவியாளர் கேகாலை வைத்தியசாலையில் இருந்து சில காலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக புலனாய்வு பிரிவினருக்கு பல தடவைகள் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாதாரண ஒரு மனிதனைப் போல் பாவனை செய்து வார்டுக்குச் சென்று மூன்று வகையான போதை மாத்திரைகளை ரூபா 2000 கொடுத்து வாங்க முயற்சி செய்த போதே குறித்த சுகாதார உதவியாளர் பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், அவர் பணிபுரியும் வார்டில் பொலீஸார் சோதனை செய்தபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 133 போதை மாத்திரைகள் போலீஸார் கண்டெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது. சந்தேக நபரை நாளை 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

0 Comments