வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடும் குளிரினால் கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகள் உயிரிழந்துள்ளதாக பேராதனை விலங்குகள் ஆராய்ச்சி நிறுவனம் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும், வடகிழக்கு பகுதியில் வீசிய குளிர்ந்த காற்றும் காரணமாக அந்த பகுதிகளில் வெளியில் வசிக்கும் 1,500க்கும் மேற்பட்ட பசுக்கள், ஆடுகள் மற்றும் எருமைகள் இறந்தன.
இந்த விலங்குகள் குளிர் தாங்க முடியாமல் இறந்ததா அல்லது வேறு ஏதேனும் நோயால் இறந்ததா என்பதை அறிய பேராதனை கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் இறந்த விலங்குகளின் உடல் உறுப்பு மாதிரிகளை ஆய்வு செய்தது.
இது தொடர்பான அறிக்கை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமாலி கொத்தலாவலவிடம் நேற்று (13ம் திகதி) வழங்கப்பட்டது.
இது தொடர்பான அறிக்கை விவசாய அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்படும் எனவும், அதற்கமைய மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

0 Comments