'மெட்டா'வின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட த்ரெட்ஸ் (Threads app) செயலியில் முதல் நாளிலேயே முப்பது மில்லியன் பயனர்கள் பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபரில் எலோன் மஸ்க் டுவிட்டரை வாங்கினார். டுவிட்டருக்கு "நட்பு" போட்டியாளராக த்ரெட்ஸ் இருக்கும் என்று மார்க் சக்கரபெர்க் கூறியுள்ளார்.
டுவிட்டர் தளத்தின் சமீபத்திய மாற்றங்களால் அதிருப்தியுற்ற டுவிட்டர் பயனர்களை த்ரெட்ஸ் ஈர்க்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
த்ரெட்ஸ், பயனர்களை 500 எழுத்துகள் வரை இடுகையிட அனுமதிக்கிறது மற்றும் டுவிட்டர் போன்ற பல அம்சங்களை “த்ரெட்ஸ்” கொண்டுள்ளது.

0 Comments