கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
எல்பிட்டியவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த சொகுசு பஸ் ஒன்றே இன்று காலை வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான பஸ்சின் முன்புற ஆசணத்தில் சிக்கியிருந்த எட்டு வயது சிறுவனை கொழும்பு தீயணைப்பு சேவைகள் பிரிவின் மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments