Ticker

6/recent/ticker-posts

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் மிகவும் கறைபடிந்ததாகும் - இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்




இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் இன்றய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலம் மிகவும் கறைபடிந்ததாகும் காரணம் இதற்கு முன்னர் இந்த நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகளில் ஒருவரின் காலத்திலும் இல்லாத அளவு முஸ்லிம் சமூகம் அரசியல் தலைமைகள் ஆன்மீகத் தலைமைகள் சமூகத் தலைமைகள், கல்வியலாளர்கள், புத்தி ஜீவிகள், தொழிலதிபர்கள், வர்த்தக சமூகத்தினர்கள், வியாபாரிகள், விவசாயிகள், செல்வந்தர்கள், தொழிலாளிகள், ஏழைகள் போன்ற அனைத்துத் தரப்பினர்களும் எவ்வித வேறுபாடுமின்றி விரும்பியோ விரும்பாமலோ இனவாதிகளினால் அடக்கியாளப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.


இந்த அரசால் திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம்களின் பொருளாதாரம் முடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. உடமைகள் சூறையாடப்படுகின்றது. மதஸ்தலங்கள் அளிக்கப்படுகின்றது அல்லது முடக்கப்படுகின்றது. மதக்கிரியைகள் மற்றும் மதக்கலாச்சாரம் தடுக்கப்படுகின்றது. ஆக மொத்ததில் முஸ்லிம் சமூகம் அனைத்துத் துறைகளிலும் நாதியற்ற நலிவுற்ற அடிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமின்றி இவ்வாறான நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றது.

இப்படியான இந்த சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருப்பதானது அல்லாஹ்வால் நமக்கழிக்கப்பட்டுள்ள ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் எனவே இந்த சிறந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி இந்த நாட்டின் முஸ்லிம் விரோத ஜனாதிபதியை மாற்றியமைக்க வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் நமக்குண்டு.
எனவே முஸ்லிம்களாகிய நாம் எவ்வித நிபந்தனைகளுமின்றி பொது வேட்பாளர் மைத்திரிபாள சிறிசேன அவர்களை ஆதரிக்க வேண்டும் என இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களையும் இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் வேண்டிக்கொள்கின்றது.

ஆத்துடன் இன்றய இந்த சூழலில் மஹிந்த அவர்களுக்கு ஒரு முஸ்லிம் வழங்கும் வாக்கானது இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராகப் பயன்படுத்தப்படும் வேட்டுக்களாகும் என்பதனை நாம் மறந்து விடக்கூடாது என்பதனையும் நினைவுறுத்திக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்

Post a Comment

0 Comments