எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி பொது அபேட்சகர் மைத்ரீபால சிறிசேனவிற்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக சுகாதார அமைச்சராக பதவி வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இரகசிய ஒப்பந்த்தின் பிரதி என மைத்ரீபால சிறிசேனவினாலும் ரணில் விக்கிரமசிங்கவினாலும் கையொப்பம் இடப்பட்டுள்ளதாக கூறப்படும் ஆவணம் ஒன்றை அவர் ஊடகவியலாளர்களுக்கு வழங்கினார். இதனை முற்றாக ஐக்கிய தேசியக் கட்சியும் மைத்ரீபால சிறிசேனவும் நிராகரித்திருக்கும் நிலையில் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்காக திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாக இன்று (23) நடைபெற்ற ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்ரீபால சிறிசேன ஆகியோர் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம் திஸ்ஸ அத்தநாயக்கவினால் வெளியிடப்பட்ட இரகசிய ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்துமாறு கோரி அமைச்சர் விமல் வீரவன்சவின் தூணடுதலின் போில் இன்று 24ம் திகதி சிரிகொத்த முன்னால் பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவிருப்பதாக அறியவருகிறது.

0 Comments