“கட்சிக்குள் காணப்படுகின்ற கருத்து முரண்பாடுகளை கவனத்தில் கொண்டு
தீர்மானம் எடுக்க வேண்டியதுள்ளது. சவரக் கத்தியில் தயிர் சாப்பிடுவது போன்ற
நிலையே எனக்கு ஏற்பட்டுள்ளது” -இவ்வாறு தெரிவித்தள்ளார் முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக அந்தக்
கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டியில் நேற்று இடம்பெற்ற
கூட்டமொன்றில் கருத்து தெரிவித்துள்ளதாக இணையதளமொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் மு.கா. தொடா்ந்தும் மௌனம் சாதித்து வரும் நிலையில் ஹக்கீம் இவ்வாறு கருத்து தொிவித்திருக்கிறாா்.
“ஜனாதிபதி என்னுடன் தொலைபேசியில் உரையாடினார். கடந்த வௌ்ளிக்கிழமை
எதிரணியின் வேட்பாளர் மைதிரிபால சிறிசேன தனது விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.
அதனை மதிப்பீடு செய்து தீர்மானம் எடுப்பது இலகுவான விடயமல்ல. ஆனால்,
கட்சிக்குள் காணப்படுகின்ற கருத்து முரண்பாடுகளை கவனத்தில் கொண்டு
தீர்மானம் எடுக்க வேண்டியதுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments