Ticker

6/recent/ticker-posts

நாமல் ராஜபக்ஸவிற்கு, சோலங்காரச்சி சவால்! பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு

பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு ஜனாதிபதியின் புத்திரரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை, அண்மையில் ஐக்கிய மக்கள் கூட்டணியிலிருந்து விலகி எதிர்த்தரப்பிற்கு மாறிய முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி சவால் விடுத்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷவின் இளைஞர்களுக்கான நாளை (தாருன்யட ஹெடக்) அமைப்பின் செயற்பாடுகள் குறித்து பகிரங்க விவாதம் நடாத்த தான் தயாராக இருப்பதாகவும், இதற்கு நாமல் ராஜபக்ஸ தயாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கான நாளை அமைப்பு தேர்தல் காலத்தில் மட்டுமே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகத் பிரசன்ன சோலங்காரச்சி தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு இந்த அமைப்பு எந்தவிதமான சேவைகளையும் அதுவரை வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாமல் ராஜபக்ஷவோடு  இந்த விவாதத்தை நடத்தத் தயார் எனவும், நாமல் ராஜபக்ஷவிற்கு தேவை என்றால் 20 பேரை விவாதத்திற்கு அழைத்து வரலாம் எனவும் தமது பக்கத்தில் இரண்டு பேர் மட்டுமே விவாதத்தில் பங்கேற்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Post a Comment

0 Comments