Ticker

6/recent/ticker-posts

மகிந்தவுக்கு தோல்வி வெறி பிடித்துள்ளது: ஜே.வி.பி

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அதிகாரத்த இழக்கும் தோல்வியை தன் கண்முன்னே கண்டுக்கொண்டிருக்கிறாா். இதன் காரணமாக தற்போது வெறிப்பிடித்து போயுள்ளாா் என்று ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் அமைச்சர்கள் செய்தவைகளால் அவர் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அத்துடன் அமைச்சர்களும் அரசாங்கத்தை கைவிட்டு வருகின்றனர். சில அமைச்சர்கள் நடத்தும் இணையத்தளங்களில் அரசாங்கத்தில் இருந்து விலகும் அமைச்சர்களுக்கு சேறுபூசப்படுகிறது.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ரவூப் ஹக்கீமுக்கு எதிராக தற்போது அந்த இணையத்தளங்களில் சேறுபூசும் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.
அரசாங்கம் இதனை மிகவும் திட்டமிட்ட வகையில் செய்து வருகிறது. அரசாங்கத்தில் இருக்கும் மிக நல்லவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் அரசாங்கத்தில் இருந்த வெளியேறியதும் இப்படி சேறுபூசப்படுகிறது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments