Ticker

6/recent/ticker-posts

நாட்டை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்ற ஜனாதிபதி நீங்கள், பிாிய மனமின்றி பிரிகின்றேன் - ஹக்கீம்

நேற்று முஸ்லிம் காங்கிரஸ் எதிரணிக்கு ஆதரவு வழங்குவதற்கான தீர்மானித்தை உத்தியோக பூா்வமாக அறிவித்தது. என்றாலும் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் தொடா்பாக கருத்து தொிவிக்கும் போது ஹக்கீம், மஹிந்த அரசிற்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் மாகாண சபை நிர்வாகத்தை தொடரப் போவதாக கூறினாா். அரசியல் வட்டாரத்தில் சா்ச்சையைக் கிளப்பியிருக்கும் அவரின் இந்தக் கூற்றோடு சோ்த்து அவா் ஜனாதிபதியை புகழ்ந்து எழுதியிப்பதாக சொல்லப்படும் கடிதம் இணைய பக்கங்களில் உலா வருகிறது.



இக்கடிதத்தில் தான் விருப்பத்தோடு விலகவில்லையென்றும், ஜனாதிபதி நாட்டை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற அரசியல்வாதி என்று குறிப்பிட்டிருப்பதாகவும் அறிய வருகிறது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஜனாதிபதிக்கு எழுதியிருக்கும் ராஜதந்திர கடிதத்தின் ஒரு பகுதி:

"கட்சி ஆதவாளர்களினாலும் மக்களினாலும் கட்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாகவே அரசை விட்டு விலகுகிறேன். வரலாற்றில் வந்த மிகப்பெரும் அரசியல்வாதி நீங்கள். நாட்டை பல்வேறு வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றிருக்கிறீர்கள். மிக்க நன்றிக்கடனுடனும் நம்பிக்கையுடனும் உங்களை விட்டு பிரிகிறேன்"

Post a Comment

0 Comments