எதிர்வரும் ஜனாதிபதித் தோ்தலில் எதிரணி வேட்பாளா் மைத்திரிபாலவிற்கு ஆறுமுகம் தொண்டமான் தனது ஆதரவை தெரிவிப்பாா் என்ற தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருந்த வேளையில், தான் மஹிந்த ராஜபகஷவிற்கே ஆதரவை வழங்கவிருப்பதாக தொண்டமான் கூறியுள்ளாா்.
இன்று (24) கொட்டகலவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தொண்டமான் இத்தகவலை வெளியிட்டுள்ளாா். மலையகத்தில் பல அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மஹிந்த அரசு செய்திருப்பதால் மஹிந்தவிற்கே தமது கட்சி ஆதரவு வழங்கும் என்றும் அவர் கூறியிருக்கிறாா்.

0 Comments