Ticker

6/recent/ticker-posts

வெற்றிலையை கைவிட்டு அன்னப்பறவையை அரவணைத்த சீதாவக்க பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசமுள்ள சீத்தாவாக்க பிரதேச சபையின் உப தலைவர் உள்ளிட்ட ஐவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளனர். 

சற்று நேரத்திற்கு முன்னர் எதிர்கட்சித் தலைவர் அலுலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இவர்கள் தங்களது ஆதரவு செய்தியை அறிவித்துள்ளனர். 

சீத்தாவாக்க பிரதேச சபை உப தலைவர் ஆனந்த ரூபசிங்க, உறுப்பினர்களான தும்கொலஹேன ரத்தனரங்சி தேரர், சந்தன பாலசூரிய, யசிரி ராஜபக்ஷ, கயான் துமிந்த ஆகியோர் இவ்வாறு மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments