Ticker

6/recent/ticker-posts

கே.பி., கருணா, பிள்ளையான் என்ற புலிகளை அலாி மாளிகையில் வைத்துக்கொண்டு, புலிகளைத் தேடி சிரிகொத்தாவுக்கு வருகிறது மஹிந்தவின் கூலிப்படை! முஜீபுர் றஹ்மான்


புலிகளை அலரி மாளிகையில் அடைத்து வைத்துக் கொண்டு  எதிர்க்கட்சியின் தலைமையகத்திற்கு புலிகளை த்தேடி கூலிப்டைகளை அனுப்பி தாக்குதல் நடாத்துகின்றாா் மஹிந்த ராஜபக்ஷ. தோல்வின் அச்சத்தில் துவண்டு போயிருக்கும் இந்த ராஜபக்ஷ கோஷ்டி  ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டு வருகின்றது.

தோ்தல் சட்டங்களை அப்பட்டமாக மீறி மஹிந்த கைக்கூலிகள் செய்த பிரசாரங்கள் இந்நாட்டு  மக்கள் மத்தியில் நிராகரிக்கப்பட்டிருப்பதால், வன்முறைகள் மூலம் தனது மன உளைச்சலை தீா்த்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனா்.  எதிரணி மீதான தொடரும் இவா்களின் தாக்குதல்கள் தோல்வியின் அச்ச நிலையையே  எடுத்துக் காட்டுகிறது.

கேபி, கருணா, பிள்ளையான் போன்ற புலிகளை தன்னோடு வைத்துக் வைத்துக் கொண்டு எதிரணியினருக்கு புலி சாயம் பூசும் இவா்களின் வங்குரோத்து அரசியலுக்கு எதிா்வரும் 8ம் திகதி மக்கள் சிறந்த பாடமொன்றை புகட்டுவாா்கள் என்று சிறீகொத்தா தாக்குதல் தொடா்பாக  வினவிய போது மேல் மாகாண சபை அங்கத்தவா் முஜீபுா் றஹ்மான் எமது எமது இணையதளத்திற்கு மேற்கண்டவாறு கருத்து தொிவித்தாா்.

Post a Comment

0 Comments