Ticker

6/recent/ticker-posts

தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்

எதிா்வரும் 8ம் திகதி இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தோ்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் (23,24) இடம்பெறவிருக்கிறது. அரச ஊழியா்கள் வாக்களிக்கவிருக்கும்  தபால் மூல வாக்களிப்பு நிலையங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க தோ்தல்கள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பதாக உதவி தோ்தல் ஆணையாளா்  யு. அமரதாஸ தொிவித்துள்ளாா்.

இன்றும் நாளையும் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும் என்றும் குறித்த இந்த தினங்களில் வாக்களிக்க முடியாமல் போகும் அரச ஊழியா்களுக்கு எதிர்வரும் 30ம் திகதி அந்தந்த மாவட்ட தோ்தல் காாியாலயங்களில் வாக்களிக்க முடியும் என்றும் உதவி தோ்தல் ஆணையாளா் தொிவித்திருக்கிறாா்.

Post a Comment

0 Comments