தபால்மூல வாக்களிப்பதற்கு முடியாமற்போன அரச உத்தியோகத்தர்களுக்கு எதிர்வரும் 02 ஆம் திகதி மீண்டும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள அரச
உத்தியோகத்தர்களை கருத்திற்கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ மேலும் குறிப்பிட்டார்.இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான காலஅவகாசம் எதிர்வரும் 04 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
85 வீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார்.
வெள்ளம் காணப்பட்ட பகுதிகளின் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதால், எதிர்வரும் சில தினங்களில் மட்டக்களப்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 Comments