Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு வேலூரில் கழிவுநீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள் பலி

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அருகே கழிவுநீர் தொட்டி இடிந்து விபத்திற்குள்ளானதில் அங்கு உறங்கிக் கொண்டிருந்த 10 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒன்பது பேர் மேற்கு வங்க மாநிலம் சால்தாபதானி கிராமத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் ஒரு தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியின் கீழ் தொழிலாளர்கள் சிலர் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலையில், கழிவு நீர்த் தொட்டி திடீரென இடிந்து விழுந்தது. இதில், 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சம்பவ இடத்தில் தீயணைப்பு அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இதுவரை 3 பேர் பாதுகாப்பாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தையடுத்து விஷவாயு வேகமாக பரவியதால் சிப்காட் பகுதியில் பீதி ஏற்பட்டது.

Post a Comment

0 Comments