Ticker

6/recent/ticker-posts

புத்தாண்டு தினத்தில் தொழில்வாய்ப்பை இழக்கும் சிடி லிங்க் நிறுவனத்தின் 2,356 ஊழியர்கள்



இங்கிலாந்து நாட்டின் விநியோக நிறுவனமான சிடி லிங்க்கில் பணிபுரிந்து வந்த 2 ஆயிரத்து 356 பேர் புத்தாண்டு தினத்தில் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர்.
நட்டத்தால், சரிவடைந்த விநியோக நிறுவனமான சிடி லிங்க், நிறுவனத்தை விற்கும்; முயற்சியில் தோல்வியடைந்ததை
அடுத்து, அங்கு பணியாற்றியவர்கள் தொழில்வாய்ப்பை இழப்பதாக சிடி லிங்க் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், புதிதாக தொழில் வாய்ப்பை இழந்தவர்களை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பணி வெற்றிடங்கள் குறித்து தேடுமாறு அந்நாட்டு அரசாங்கம் ஊக்குவித்துள்ளது.
இது சிடி லிங்க் ஊழியர்களுக்கு மிகவும் கவலையளிக்கும் விடயமாகும். தொழில்வாய்ப்பை இழந்தவர்களுக்கு உதவி செய்வதற்கான வழிமுறைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது என வர்த்தக செயலாளர் Vince Cable  தெரிவித்தார்.
Coventry நகரை தளமாகக் கொண்ட சிடி லிங்க் நிறுவனமானது, கடந்த 1969ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் 2 ஆயிரத்து 727 பேர் பணியாற்றி வந்தனர். சில வருடங்களாக தொடர்ந்து நட்டத்தை எதிர்க்கொண்டு வந்த சிடிலிங்க் நிறுவனத்தில் தற்போது வெறும் 371 ஊழியர்கள் மாத்திரம் பணியாற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments