Ticker

6/recent/ticker-posts

கடந்த அரசின் ஊழல்களை எமக்கு அறியத்தாருங்கள் - சம்பிக்க ரணவக்க




ஊழல்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டுவதற்கு மக்கள் முன்வர வேண்டும் எனவும், இந்நாட்டில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் புலனாய்வு செய்தவற்கு உழல் எதிர்ப்பு முன்னணியை ஆரம்பித்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக் ரணவக்க கொழும்பில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மக்கள் தமக்குத்  தெரிந்த தகவல்களை வழங்க முன்வருமாறும் அவ்வாறு தகவல்கள் கொடுப்பவர்களது விபரங்கள் இரகசியமாக பேணப்படும் எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவத்திருந்தார். 

முன்னைய அரசாங்கத்தில் ஊழலில் ஈடுபட்ட அரச ஊழியர்கள், பாதுகாப்புப் பிரிவினர், அமைச்சர்கள்  மற்றும் கணக்காளர்கள் என யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றார். இந்நாட்டிற்கு பொருளாதார ரீதியில் குற்றம் இழைத்தவர்கள் இந்நாட்டில் இருந்து தப்பிச் சென்றிருந்தாலும் கூட அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தாம் முன்வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தகவல்களை வழங்க கீழ்வரும் தொலைபேசி இலக்கம், முகவரி ஆகியவற்றை பயன்படுத்துமாறும் வேண்டப்பட்டது. 

Tel: 011 288 4583
19/100, Welikadawaththa Road, Rajagiriya

Post a Comment

0 Comments