சற்று நேரத்திற்கு முன் கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. ஜனாதிபதி மைத்ரீபால சிரிசேன சுதந்திரக்கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் பொய்யானது என முன்னாள் அமைச்சர் நிமல் சிரிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். இச்சந்திப்பிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் கலந்துகொன்டமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்ரீபால சிரிசேன அவர்கள் கட்சியின் தலைராக நியமிக்கப்பட்டுள்ளதாக துமிந்த திசாநாயக்க தலைமையிலான ஒரு குழு இன்று மாலை தெரிவித்திருந்ததை கொழும்பு மெயில் டுடே வெளியிட்டிருந்தது. அதிகமான உறுப்பினர்கள் தம்முடனேயே இருப்பதாக நிமல் சிரிபால டி சில்வா ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், இங்கு அமர்ந்திருப்வர்களை கணக்கிட்டு தெரிந்து கொள்ளுங்கள் எத்தனை பேர் நம்மோடு உள்ளனர் என்பதை அறிந்துகொள்வதற்கு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

0 Comments