நராஹேன்பிட்ட பகுதியில் வர்த்தக களஞ்சிய நிலையம் ஒன்றில் கணடுபிடிக்கப்பட்ட சிறிய விமானத்தின் உரிமையாளர் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன.
நேற்று (13) பொலி்ஸ் அவரசர அழைப்புப் பிரிவுக்கு அறியக்கிடைத்த தகவலைக் கொண்டே இந்த வர்த்தக களஞ்சிய நிலையம் சோதனைக்குட்படுத்தப்டடது. அங்கு இருவர் பயணிக்கக் கூடிய வகையிலான சற்றுப் பழமையான விமானமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு நபர்கள் அவ்விமானத்தை அவ்விடத்தை விட்டு அகற்ற முயற்சித்த வேளையிலேயே பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி விமானமானது இலங்கை சினிமா இயக்குனர் சந்திரன் ரத்னம் உடையதென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அவர் யோஷித ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு அமைவாக அவருக்கு வழங்கியதாகவும் சந்திரன் ரத்னம் குறிப்பிட்டுளளார்.
1970களில் நிர்மாணிக்கப்பட்ட இவ்விமானததின் தயாரிப்பாளர் இலங்கை விஞ்ஞானியான ஆர். விஜேவர்தன ஆவார்.






0 Comments