இலங்கை தொலைத் தொடர்பு ஆணைக்குழு கொழும்பு எல்விடிகல மாவத்தையிலுள்ள தமது அலுவலகத்திறகு இணையாக மற்றுமொரு அலுவலகத்தை கொழும்பு லோன்டன் பிளேஸ் என்ற இடத்தில் நிர்வகித்து வருவதாக அறிய வருகிறது. கடந்த ஒரு மாதத்தற்கு முன்னர் வாடகைக்கு பெறப்பட்டிருப்தாக கூறப்படும் இந்த
அலுவலகத்தில் கணனி உபயோகத்தோடு தொடா்புடைய பல விஷேட செயற்பாடுகள் இடம் பெறுவதாக அறிய வந்திருக்கிறது.
அலுவலகத்தில் கணனி உபயோகத்தோடு தொடா்புடைய பல விஷேட செயற்பாடுகள் இடம் பெறுவதாக அறிய வந்திருக்கிறது.
இந்த கட்டிடத்திற்குள் இடம்பெற்று வரும் செயற்பாடுகளுக்காக மிக பெறுமதிவாய்ந்த நவீன கணனி தொடா்பு சாதனங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும், ஊழியர்கள் அல்லாத ஒரு புதிய குழுவினர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அறிய வருகிறது.
இந்த பணியாளர்களில் பலருக்கு வெளிநாட்டு விஷேட பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாகவும், இவர்களுக்கு தங்குமிடமாக குறித்த கட்டிடத்திற்கு பக்கத்தில் உள்ள ஸ்லிடா நிறுவனத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், டெலிகொம் நிறுவனத்திலிருந்து அதிகமான தொலை பேசி இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.
இது தொடர்பாக சிங்கள வார இதழ் ஒன்று இலங்கை தொலை தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை தொடர்பு கொண்டு வினவியதாகவும், தமது தலைமையகத்தில் மறுசீரமைப்பு பணிகள் இடம்பெறுவதால் தற்காலிகமாக இரண்டு வருட வாடகைக்கு குறிப்பிட்ட புதிய கட்டிடத்தை பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
என்றாலும் தொலை தொர்பு ஆணைக்குழுவின் தலைமையகத்தில் பணியாளர்களை வேறு இடங்களுக்கு மாற்றும் அளவிலான எந்த மறுசீரமைப்புப் பணிகளும் இடம்பெறவில்லையென்று அறியவருகிறது.

0 Comments