ஐ.தே.க ஆட்சிக்காலத்தில் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருப்பிப் பெற்றதாக தோ்தல் பிரசாரங்களில் சொல்லப்படுகிறது. இது மக்களை திசை திருப்பும் அப்பட்டமான பொய்யென்று காப்புறுதிக் கூட்டுத்தாபன ஊழியா்கள் சங்கம் தொிவித்துள்ளது.
காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தனியாருக்கு மாற்றிய கொடுக்கல் வாங்கலில் ஊழல்கள் இடம்பெற்றதாக 2006 கோப் அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதனை முன்வைத்து காப்புறுதி ஊழியா்கள் சங்கம் ஜனாதிபதி மஹிந்தவை காப்புறுதி கூட்டுத்தாபனத்தை மீளப்பெறுமாறு கோாிக்கை விடுத்தது. அந்தக் கோாிக்கையை ஜனாதிபதி நிராகாித்ததாகவும், தமது சங்கத்தினால் உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அடிப்படை மனித உாிமை மீறல் வழக்கொன்றின் தீா்ப்பின் மூலம் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மீட்கப்பட்டதாகவும் காப்புறுதி ஊழியா்கள் சங்கம் தொிவித்துள்ளது.
காப்புறுதிக் கூட்டுத்தாப ஊழியா்களான ஆாியவங்ச பண்டாரநாயக்க மற்றும் ஆர். எஸ். நந்தலால் ஆகியோா் சாா்பாக இந்த மனு உயா் நீதி மன்றத்திற்கு சமா்ப்பிக்கப்பட்டது என்றும் இந்த முயற்சியாலேயே காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மீளப்பெறப்பட்டது என்றும் ஜனாதிபதி தாம் மீளப் பெற்றதாக கூறுவது பொய்யென்றும் ஊழியா் சங்கம் தொிவித்திருக்கிறது.

0 Comments